(தொடர்ந்து படிக்கவும் கீழே சாதாரண தமிழ் கூறப்பட்டுள்ளது)

பிடரி நொந்து , உளைந்து,
குத்தி,
வலித்து
இடறி புயத்தில் இழுத்து
முதுகு நோவாய் தொடர்ந்து தலையில் குத்தி
பிடரி வாங்கும்
அரும் கண் அயரும் பிடரி வாதமாமே .

இந்த சித்த மருத்துவச் செய்யுள் பிடரி வாதம் அதாவது சர்வைவல் ஸ்பாண்டைலோசிஸ் என்று கூறப்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் ஒரு வகையான வியாதியினை பற்றி குறிப்பிடுகிறது

அதாவது கழுத்தில் வலி ஏற்படும் வலி என்பது சாதாரணமாக உணரக்கூடிய பொதுவான அறிகுறி

உளைச்சல் என்பது தசை சோர்வுடன் கூடிய வலியினை குறிப்பிடுகிறது

குத்துதல் என்பது Shooting pain
உள்ளே ஒரு நூல் போன்ற அளவில் அல்லது கம்பி போன்ற அளவில் ஏதோ இழுப்பது அதன் வழியே மின்சாரம் அல்லது சூடு பரவுதல் போன்ற உணர்வுகளை தரும் ஒரு வகை வலியாகும்

தலையின் அடிப்பாகமான பிடரியில் வலி ஏற்படுதல்
தோள் புயத்தில் வலி ஏற்படுதல் தோள்பட்டையில் வலி ஏற்படுதல் போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும்

நோய் ஏற்படக் காரணங்கள்:

சரியான முறையில் கழுத்தினை வைத்துக் கொள்ளாமல் இருத்தல் தொலைதூரம் இருசக்கர வாகனங்கள் ஓட்டுதல்

தொடர்ச்சியாக கழுத்து மடிந்தபடி வேலைகள் செய்தல்(கம்ப்யூட்டர் மட்டும் தொலைபேசி பார்த்தல்)

தலையில் பாரம் சுமத்தல்
கழுத்தில் ஏற்படும் அடி இடி குத்துதொடர்ச்சியாக உடலுக்கு வறட்சியை தரும் உணவுகளை உட்கொள்வது அதாவது அதிக புளிப்பு குளிர்ச்சி காரம் உள்ள உணவுகள் உடலை வறளச் செய்யும்

நோயின் செயல்பாடு :
கழுத்து எலும்புகளுக்கு இடையில் இருக்கும் கழுத்தெலும்பு சவ்வானது தன்னுடைய நீர்த்தன்மையையும் நெகிழ்ச்சி தன்மையையும் இழந்து வறண்டு விடுவதால் வெடிப்புக்கு ஆட்படுகின்றது இதனால் அது தன் நிலையை விட்டு வெளியே தள்ளப்படுகிறது இப்போது எலும்புகளின் கட்டமைப்பு கலைகிறது இதனால் எலும்பின் மேல் அடுக்கில் உள்ள பாரம் சீரற்று கழுத்துப் பகுதியினை தாக்குவதால்கழுத்து எலும்புகளின் இடையில் இருந்து வெளியேறும் நரம்புகள் அழுத்தப்படுகிறது நரம்புகளுக்கு ஏற்படும் பாதிப்பினை பொறுத்து நோயாளிகளுக்கு அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கிறது

தண்டுவடம் முழுவதும் அழுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்பு இதில் கை, கால் செயலிழப்பு மலம் சிறுநீர் கட்டுப்படுத்த இயலாமை போன்ற குறிகுணங்கள் ஏற்படலாம்

கழுத்துப் பகுதியில் இருந்து வெளிவரும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம்கை தோள்பட்டை இவற்றில் வலி கழுத்தை அசைக்க முடியாமல் கை மரத்துப் போகுதல் கைகளில் பல குறைவு
தொடர் தலைவலி போன்ற குறிகுணங்கள் ஏற்படலாம்

சித்த மருத்துவ சிகிச்சைகள் :

1 முதலாவதாக நோயாளியின் தினசரி வாழ்க்கை முறையில் இந்த வியாதி ஏற்படுவதற்கான செயல்பாடுகள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை நீக்குதல்

2 தினசரி உணவு பழக்கவழக்கங்களில் நோய் நிலையை தூண்டும் உணவுகள் மற்றும் பழக்கங்கள் இருப்பின் அதனை குறிப்பிட்டு நீக்குதல்

கட்டு:
மருந்து பொருட்களை பயன்படுத்தி கழுத்தில் கட்டுப்போட்டு கழுத்தின் நிலையான அசைவுகளை பராமரித்தல்

பற்று :
வாத நீர் என்று குறிப்பிடப்படும் தசை மற்றும் எலும்புகளின் இயற்கை தொழிலை தடை செய்யும் கழிவு சேர்க்கையான உபரிகளை நீக்குவதற்காக கழுத்தை சுற்றி விடப்படும் மருந்து பசை.

ஒற்றடம் :
கழுத்தில் மருந்து எண்ணெய்கள் மூலிகைகள் கொண்ட முடிச்சினை கொண்டு ஒட்டடமிட்டு தசைக்கு ஊட்டத்தனையும் நெகிழ்ச்சியையும் கொண்டு வருதல்

உள் மருந்துகள்:
மேலும் அழற்சிகழுத்தினை பாதிக்காமல் இருக்கவும் கழுத்தில் உள்ள ஜவ்வுகளுக்கு நிறுத்தவும் அளிக்கவும் அதன் நிகழும் தன்மையினை காக்கவும் நோய் தொடர்ச்சியாக முத்துவதை தடுக்கவும் உள் மருந்துகள் வழங்கப்படும்

வர்ம தூண்டுதல்:
இதனால் கழுத்துப் பகுதியில் உள்ள உயிர் சக்தி ஆற்றல் தூண்டப்பட்டு கழுத்தின் இயற்கை உடல்நிலையினை மீட்டுக் கொண்டு வர உதவுதல்

மருத்துவத்தின் கால அளவு:

ஆரம்ப நிலை நோய்க்கு 15 நாட்கள் சிகிச்சை போதுமானது

கழுத்துப் பகுதியில் சோர்வுடன் கூடிய வலி
சிறிது நேரம் கூட கழுத்தினை மடக்கி பயன்படுத்த முடியாத நிலை கை மரத்துப் போதல் போன்ற குறிகுணங்கள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை சிகிச்சை தேவைப்படலாம்