ஆண் பெண் மகப்பேறின்மையும் காரணங்களும்
Our doctors are on call 24/7. Same Day Appointments Available.
குழந்தை பேறின்மை தற்பொழுது தம்பதிகளை மிகவும் பாதித்து வரும் ஒரு குறைபாடாகும். மலட்டு தன்மைக்கு காரணம் ஆணா பெண்ணா என்ற சர்ச்சை பல குடும்பங்களின் பிரிவுக்கு காரணமாக அமைகிறது. குழந்தை பேறின்மைக்கும், ஆண் பெண் மலட்டுத்தன்மைக்கும் பல்வேறு காரணங்களை சித்தர்கள் கூறியிருந்தாலும், ஞானவெட்டியான் என்ற நூலில் திருவள்ளுவ நாயனார் கூறிய கருத்துகள் மிகவும் நுட்பமானவை. அவர் கூறிய ஆறு விதமான காரணங்கள் நவீன அறிவியலுக்கு சற்றும் சளைத்தது அல்ல.
இயல்பான உடலுறவு இருந்தாலும் கூட நீண்ட நாட்கள் கருத்தரிக்காமல் இருந்தால் அதனை கருக்குழியில் தோன்றும் சூலை நோய் என ஞானவெட்டியான் நூல் குறிப்பிடுகிறது.
“மாதர் கருக்குழியில் செனித்தடு சூலைநோய்
வகையாது – விதமதுவு மணங்கு காலைப்
பதாராகுங் கருக்குழியில் சதைதான் மூடிப்
பாயாது வந்துதவும் பாழாய்ப் போகும்
விதூமாங் கருக்குழியில் கிருமி சூழ்ந்தால்
விந்ததனை யுண்டு வெறும் பாழாம் பூமி
போதரவாய்க் கருக்குழியில் பூநீர் காரம்
பூக்கு மந்த பூமியைப்போல் பூத்தாலாண்டே” – (1112)
“பூக்கு மந்தப் பூநீரு உவருண்டானால்
புளிப்பாழு வந்ததனைப் பூநீ ருண்ணும்
எர்க்காது இடம்விட்டு இடந்தான் விந்து
இருப்பிடம் விட்டிடம் பாய்ந்தா எனிசெல்லாது
கார்க்காது கருக்குழியிலில் வாய்வுஞ் சேரக்
கட்டிடுமோ நாதவிந்து கனல்நோய் சேரும்
பார்க்க பனிக்குடமுடையும் பனிநீர் போனால்
பாழாகும் விந்துவும் பாழ்த்தா னாண்டே” – (1113)
“வாதுசெய்யும் சூலையினால் மலடா மென்று
மாமுனிவர் எனக்குரைக்க யானுஞ் சொன்னேன்.
… …. …. …. …. … … ..
பூதலத்தில் பெண்மலடு புகலப் போகா
புருடன் மலடெனு மிகவும் புகல்பதாண்டே”.
[1] கருக்குழியில் சதை வளர்ந்திருந்தால் அவ்விடம் விந்து பாயாதிருப்பது (Tubal occlusion).
[2] கருக்குழியில் கிருமி வளரந்து அவ்விடம் செல்லும் விந்துவை கிருமிகள் உண்டுவிடல் (Endometritis).
[3] கருக்குழியில் பூநீறு பூக்கும் நிலம் பொல உவர் பூக்கும். அந்ந உப்பு கடினந்பட்டு விந்துவை உண்ணும் (Calcified fibroid).
[4] விந்து இடம் விட்டு இடம் செல்வதனால் முன்னோக்கி செல்லாமல் சரிவரப் பாய்வதில்லை (Impair sperm cell progression).
[5] கருக்குழியில் வாயு அதிகமாக சேர்ந்தால் இறுக்கம் ஏற்பட்டு விந்து அவ்விடம் செல்லாது (Intrauterine gas).
[6] உறவின் போது இருவரின் உடலின் வெப்பத்தால் கருக்குழியில் விந்து நீர்த்துப் போதல் (Reduced sperm viscosity in high temperature).
கருவை அழிக்கக்கூடிய சூலை நோய்களில் மேற்கண்ட ஆறு வகை நோய்கள் தற்போதைய குழந்தை பேறின்மைக்கு காரணமாக இருக்கிறது என்பதை நவீன அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. மேற்கண்ட காரணங்களுக்கு நவீன மருத்துவம் சிகிச்சை அளிக்கும் போது கருக்குழாயில் அடைப்பை நீக்குதல், நுண் கிருமி தொற்று நீக்க காசநோய் மருந்துகளை வழங்குதல், கடினமாகி போன கருப்பை கட்டிகளை அறுவை செய்து நீக்குதல், சரிவர பாயாத விந்துவை குழல் மூலமாக உள்ளே பீச்சி அடித்தல், கருக்குழாயில் உள்ள வாய்வை நுண்துளை குழல் மூலம் உறிஞ்சி வெளியேற்றுதல், ஆண் பெண் உடல் வெப்பநிலை சமப்படுத்த உறவுக்கு முன்பு கருவாயில் நைட்ரஜன் சேர்ந்த மருந்துகளை வைத்தல் என நவீன மருத்துவ அறிவியலும் பல்வேறு சிகிச்சை முறைகளை இதற்காக வரைமுறைப்படுத்தி உள்ளது.
சித்த மருத்துவத்திலும் பல்வேறு மருந்துகள் இதற்காக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் மலட்டுத்தன்மை என்பது ஆண் பெண் இருவருக்குமே ஏற்படலாம் என்று திருவள்ளுவ நாயனார் குறிப்பிடுகிறார். அகத்தியர் இந்த கருத்துகளை கூறியுள்ளதாக ஞானவெட்டியானில் அவர் குறிப்பிடுவது எக்காலத்துக்கும் பொருந்தும் சிறப்பான மருத்துவ முறையாகும். தகுந்த சித்த மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சை அளித்தால் பயன் பெறலாம்.
பெண் மலட்டின் குணம்
மிஞ்சிய கிருமியாலும்
மிகுந்ந்தோர் வாயுவாலும்
போகத்தின் அனலினாலும்
விரிந்ததோர் கெர்ப்பரோகம் பல பல
விதங்கள் ஆமே
கடைக்கண் சிவந்து காணும்
உந்தி நான் உயர்ந்து காணும்
மார்பு தான் கறுத்து கூனும்
பால் கட்டி குறைந்து காணும்
தலையினில் குத்து உண்டாம்
காலோடு கைகள் சார்ந்து கனத்திடும்