உங்கள் ஆரோக்கியத்திற்கு இயற்கை
சிகிச்சை-சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது ஒளி உடலை கொண்ட இறைநிலை அடைந்த சித்தர் பெருமான்கள் வாயிலாக இறைவனால் மனித குலத்தின் நன்மைக்காக வழங்கப்பட்ட மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் வாதம்/பித்தம் / கபம் என்னும் உயிர் ஆற்றல்களின் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் நோய் உண்டாகிறது என்றும் அதற்கான மருத்துவ முறைகளையும் மனிதன் மண்ணில் தோன்றிய காலம் முதலே வரையறை செய்து உள்ளது.
இம்மூன்று உயிர் தாதுக்களும் – மூன்று முக்கிய வாயுக்களின் இயக்கத்தினையும் அவற்றின் தொழில்களில் ஏற்றத்தாழ்வுகளையும் நாடிகள் மூலம் பிரதிபலிக்கிறது.
இடகலை நாடி – அபானன் என்னும் வாயுவினையும்
பிங்கலை நாடி- பிராணன் என்னும் வாயுவினையும்
சுழுமுனை நாடி – சமானன் என்னும் வாயுவினையும் தன்னுள் கொண்டு செயல் புரிகிறது.
சித்த மருத்துவத்தில் நோய் அறிதல்:
சித்த மருத்துவம் இரண்டு லட்சம் மருத்துவ நூல்களையும் கோடிகளாய் விரிந்த நோய்களையும் தன்னுள் கொண்டுள்ளது அதனை சுருக்கி 4448 வியாதிகளை விவரிக்கின்றது
நோய் அறிதலினை
a) நோயாளி கூறும் குறிகுணங்கள்
b) மருத்துவன் நோயாளியினை பரிசோதித்தல்
C) எண் வகை தேர்வுகளான
1,நா 2, நிறம் 3, மொழி 4, விழி 5, நாடி 6, ஸ்பரிசம் 7, மலம் 8, மூத்திரம் என்னும் பரீட்சைகளை கொண்டும் நோய்கள் கண்டறியப்படுகிறது.
சித்த மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்:
சித்த மருத்துவத்தில் சிகிச்சை முறைகள் அக மருந்து 32 வகைகளாகவும்
புற மருந்து 32 வகைகளாகவும் மிக நேர்த்தியாக வகை படுத்தப்பட்டுள்ளது.
சித்த மருத்துவமும் உணவும்:
சித்த மருந்துகளின் செயல்முறைகளை உணவுகள் குறைத்து கூட்டக் கூடிய பண்புகளை கொண்டு உள்ளதால் மருந்துண்ணும் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பத்தியம் என்று வகை படுத்தியுள்ளது.
சித்தமருந்துகளின் செய்முறை:
சித்த மருத்துவத்தில்
1) மூலிகை 2) உபரசம் 3) தாது 4) ஜீவ பொருட்கள் இவற்றிலிருந்து மருந்துகள் மிக நேர்த்தியான வேதியல் முறைகளின் அடிப்படையில் மருந்துகள் செய்யப்படுகிறது.
மருந்தின் நன்மை/தீமைகள்:
சரியாக உருவாக்கப்பட்ட மருந்துகளை தேர்ச்சியும் முதிர்ச்சியும் உள்ள மருத்துவர்களின்
பரிந்துரையில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் மருந்துகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சிறந்த ஒளடதமாக செயல்படும்.
மருந்து எடுத்துக் கொள்ளும் கால அளவு:
3 நாட்கள்
15 நாட்கள்
48 நாட்கள்
6 மாதம்
ஒரு வருடம் என நோயின் நிலையை பொறுத்து மருந்துகளுக்கான கால அளவுகள் உள்ளது.
சித்த மருத்துவமும் / வீட்டு வைத்தியமும் :
சித்த மருத்துவம் வீட்டு வைத்தியமாக செய்ய வாய்ப்புகள் இல்லை சித்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வீட்டில் செய்யப்படும் சிகிச்சைகள் சில மெல்லிய குறிகுணங்களை சிறிது குறைக்கலாமே தவிர அது சரியா மருத்துவ முறையாக நோயினை சரி செய்வது இல்லை.
சித்த மருத்துவமும் வாழ்கை முறையும்:
சித்த மருந்துவம் நோயின்றி வாழும் வழிமுறைகளை மருந்துகளின் உதவியின்றி நடைமுறைப்படுத்தும் வழி வகைகளை தன்னுள் கொண்டுள்ளது.
Our Services
At Siddhi Siddha and Ayurvedic Healthcare, we are dedicated to providing your one-stop solution. Our wide range of services is designed to meet your diverse needs, ensuring convenience and excellence in every interaction.
எலும்பு மற்றும் மூட்டு நோய்
வருந்திட கழுத்து வீங்கி, வலித்து, உளைந்து, இறுக்கி, விம்மி பிடரிவாங்கி பொருக்கென குத்தும் உண்டாய் அடைத்து வந்து நோவாய் இருந்து விடும் இது கண்டவாதம் செய்கையே
கல்லடைப்பு
கலங்கினதோர் தண்ணீர் தான் குடித்த பேர்க்கு, கல், எலும்பு, மண் தான் கலந்தன்னம் ,பழம் பண்டம் அருந்தலாலும், மாந்தத்தில் வாயுவாம் பதார்த்தமதை கொள்வதாலும், கல்லடைப்பு தோன்றும் தானே.
தோல் நோய்
வியாதியுள் மூவாறு (3×6) விளங்கிய தோல் நோய் கேள் கிரந்தி சுழல் மேகத்தால் ஆறும்.